இலங்கை வரும் அயர்லாந்து

1 year ago
Cricket
(256 views)
aivarree.com

அயர்லாந்து கிரிக்கெட் அணியானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தில் அயர்லாந்து, இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இலங்கை தற்போது நியூசிலாந்தில் உள்ளது.

2021-2023 ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இடம்பெறும் இத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியைச் சந்தித்தது.

இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கை நழுவிப் போனது.

இந்நிலையில் அடுத்த மாதம் அயர்லாந்து சுற்றுப் பயணம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்காது. எனினும் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பருவத்திற்கு ஆயத்தமாக ஒரு முன்னோடிப் போட்டியாக அமையும்.

இந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொள்ளும் அயர்லாந்து ஜூன் தொடக்கத்தில் இங்கிலாந்தை ஒரே ஒரு டெஸ்டில் எதிர்கொள்கிறது.

இலங்கை – அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கலியில் நடைபெறவுள்ளது.
முதலாவது போட்டி ஏப்ரல் 16 ஆம் திகதியும் இரண்டாவது போட்டி ஏப்ரல் 24 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.