இலங்கையுடனான ஒருநாள் தொடரில் தலைவராகிறார் லெதம்

1 year ago
Cricket
(248 views)
aivarree.com

எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் புதிய வீரர்கள் பலர் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் முன்னணி வீரர்களான கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி, டேவோன் கான்வே மற்றும் மிட்செல் சான்டனர் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

ஃபின் ஆலன், லொக்கி பெர்குசன் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் ஐ.பி.எல். தொடருக்காக முதல் ஒருநாள் போட்டியின் பின்னர் இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.

இந்த மூவருக்கு பதிலாக ஹென்றி நிக்கோல்ஸ், மார்க் சாப்மேன் மற்றும் பென் லிஸ்டர் ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இளம் வீரர்களான வில் யங் மற்றும் டாம் ப்ளண்டெல் ஆகியோருக்கும் இந்த தொடர் நல்ல வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 25 முதல் 31 வரை ஆக்லாந்து, கிறிட்சர்ச் மற்றும் ஹாமில்டனில் நடைபெறும்.

நியூஸிலாந்து அணி
டொம் லெதம் (அணித் தலைவர்), ஃபின் ஆலன், டொம் ப்ளன்டெல், சாட் போவ்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், லொக்கி பெர்குசன், மாட் ஹென்றி, பென் லிஸ்டர், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி, பிளேர் டிக்னர், வில் யங்.