இன்னிங்ஸாலும் 58 ஓட்டங்களாலும் இலங்கை படுதோல்வி

1 year ago
Cricket
(224 views)
aivarree.com

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியானது 2021 – 2023 ஐ.சி.சி. டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் கீழ் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணியுடன் விளையாடி வந்தது.

இதன் முதல் போட்டியில் நியூஸிலாந்து 2 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றிருந்தது.

இந் நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி கடந்த 17 ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 580 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்தியது.

நியூஸிலாந்து சார்பில் அதிகபடியாக கேன் வில்லியம்சன் 215 ஓட்டங்களையும், டேரில் மிட்செல் 200 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை 164 ஓட்டங்களையும் பெற்று, அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்க இரண்டாவது இன்னிங்ஸுக்காக தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் ஓரளவு தாக்கு பிடித்து ஆட முடிந்தது.

எனினும் போட்டியின் 4 நாம் நாளான இன்று 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 358 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது இலங்கை.

இதனால் இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்களினால் தோல்வியை சந்தித்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை சார்பில் அதிகபடியாக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மாத்திரம் 89 ஓட்டங்களை பெற்றார்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹேன்றி நிக்கோல்ஸும், தொடரின் ஆட்டநாயகனாக கேன் வில்லியம்சனும் தெரிவானார்கள்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மார்ச் 25 ஆம் திகதி ஆக்லாந்தில் ஆரம்பமாகும்.