ஆஸி.யுடனான ஒருநாள் தொடரை தவறவிட்ட ஸ்ரேயாஸ் அய்யர்

1 year ago
Cricket
(166 views)
aivarree.com

எதிர்வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஸ்ரேயாஸ் அய்யர் நீக்கப்பட்டுள்ளார் என்பதை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் ஸ்ரேயாஸ் அய்யர், இம் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியல் லீக் தொடரிலும் சில போட்டிகளை தவற விடுவார் என்று கூறப்படுகின்றது.

போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்தின் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது, ஸ்ரேயாஸின் முதுகு பகுதி உபாதைக்குள்ளானது.

இதன் விளைவாக குறித்த போட்டியின் இறுதி இரண்டு நாட்களில் அவர் விளையாடவில்லை.

ஸ்ரேயஸ் அய்யரின் உடற் தகுதி குறித்த விரிவான அறிக்கையினை இன்று இந்திய தேசிய கிரிக்கெட் குழு, பி.சி.சி.ஐ.யிடம் சமர்ப்பிக்க உள்ளது.

இந் நிலையில் மார்ச் 31 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.பி.எல். தொடருக்கு முன்னர் ஸ்ரேயஸ் அய்யர் பூரண குணமடைந்து கொல்கத்தா அணிக்கு திரும்புவாரா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.