அணித்தலைவரானார் க்றிஸ்டியானோ ரொனால்டோ | மெஸ்ஸிக்கு எதிராக முதல் போட்டியில் மோதல்

1 year ago
Football
(257 views)
aivarree.com

கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி ஆல்-ஸ்டார் 11 அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் வியாழக்கிழமை லியோனால் மெஸ்ஸி தலைமையிலான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) உடன் இடம்பெறவுள்ள நட்பு ரீதியான போட்டியில் சவுதி ஆல்-ஸ்டார் அணி விளையாடவுள்ளது.

ரொனால்டோ கடந்த மாதம் அல்-நஸ்ர் அணியுடன் ஒப்பந்தம் செய்த பிறகு விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.

37 வயதான அவர் அல்-நஸ்ர் மற்றும் அல்-ஹிலால் ஆகிய அணிகளின் வீரர்களைக் கொண்ட சவுதி ஆல்-ஸ்டார் அணியை வழிநடத்துவார்.

இந்த போட்டி மூலம் சவூதி அரேபியாவில் ரொனால்டோ அறிமுகமாகவுள்ள நிலையில் அவருக்கு அணித்தலைவர் கைப்பட்டி வழங்கப்பட்டது.

தங்களுக்கு இடையே 12 முறை பலோன் டி’ஓர் விருதை பகிர்ந்துள்ள மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகிய இரு “சூப்பர் ஸ்டார்களும்” நேருக்கு நேர் மோதும் கடைசி சந்தர்ப்பமாக இது இருக்கலாம் என கருதப்படுகிறது.
ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவரும் ஸ்பெயினில், ​​முறையே ரியல் மெட்ரிட் மற்றும் பார்சிலோனாவுக்காக பல போட்டிகளில் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிட்டுள்ளனர்.