2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஆரம்பிக்க முன்னதாகவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
காயம் காரணமாக அதன் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் முழு தொடரில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஸ்ரேயாஸ் முதுகில் காயம் அடைந்தார்.
மேலும் அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அது அவரை 2-3 மாதங்கள் சகல போட்டிகளில் இருந்தும் ஒதுங்கியிருக்கச் செய்யும் என தெரிவிக்கப்படுகுpறது.
2022ல் ரூ. 12.25 கோடிக்கு வாங்கப்பட்ட ஐயர் இல்லாதது கொல்கட்டா நைட் ரைடர்ஸுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக சுனில் நரேன், சர்துல் தாகூர் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோரில் ஒருவரை தலைவராக நியமிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.