வைரலான பாபர் அசாம் – சஹீன் அஃப்ரிடி காணொளி

1 year ago
Cricket
(384 views)
aivarree.com

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எலிமினேட்டர் 2-வது போட்டியில் லாகூர் கலாண்டர்ஸ் அணி பெஷாவர் சல்மியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மொஹமட் ஹாரிஸ் 54 பந்துகளில் 85 ஓட்டங்களையும், பாபர் அசாம் 36 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு, மிர்சா தாஹிர் பெய்க் 42 பந்துகளில் 54 ஓட்டங்களை எடுத்து, கலாண்டார் 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியடைய உதவினார்.

இந்த வெற்றியின் மூலம், ஷாஹீன் அப்ரிடி தலைமையிலான அணி முல்தான் சுல்தான்களுடன் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இந்த போட்டி மார்ச் 18 அன்று லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நேற்றைய போட்டியின் போது லாகூர் கலாண்டர்ஸ் முகாமில் அனைத்து நிகழ்வுகளும் மகிழ்ச்சிடன் நிலவின.

ஆனால், பெஷாவர் சல்மியின் வீரர்கள் தொடரின் இறுதி போட்டியை மிகவும் நெருங்கிய போதும் வாய்ப்பை இழந்ததற்காக ஏமாற்றம் அடைந்தனர்.

போட்டி நிறைவடைந்தப்பின் சஹீன் அப்ரிடி, பாபர் அசாமை சந்தித்து நெருக்கத்துடன் உரையாடும் காணொளி ஒன்று பரபரப்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.