உலகக்கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டியில் கட்டார் மற்றும் ஈக்குவடோர் அணிகள் மோதின.
இதில் ஈக்குவடோர் அணி 2க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் கட்டாரை வீழ்த்தியது.
அதேநேரம், இந்த தோல்வியுடன், உலகக்கிண்ணத் தொடரை நடத்தி முதல் போட்டியிலேயே தோல்வியுற்ற முதலாவது நாடாக கட்டார் பதிவானது.