பாரிஸில் திங்கட்கிழமை லாரஸ் சர்வதேச விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த ஆண்டு பிபா உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன சிறந்த அணிக்கான விருதினையும் பெற்றுள்ளது.
கடந்த டிசம்பரில் கட்டாரில் நடந்த 2022 உலகக் கிண்ணத்தில் மெஸ்ஸி ஆர்ஜென்டீனாவுக்குத் தலைமை தாங்கினார், ஏழு முறை கோல் அடித்து தங்க பந்து கிண்ணத்தை வென்றார்.