ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் யாழ்ப்பாண வீரர் வியாஸ்காந்த்

6 months ago
Cricket
(265 views)
aivarree.com

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிக்கட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த், IPL போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வலை பந்து வீச்சாளராக தெரிவாகியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். 

பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும், சர்வதேச விளையாட்டு வீரர்களின் அறிமுகங்களும் கிடைக்கப்பெற்றன. 

தற்போது IPL இல் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சு வீரராக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

என்னுடன் குமார் சங்கக்கார கதைத்து இருந்தார். 

எனது கிரிக்கெட் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார். 

அது தொடர்பில் சிலருடன் கதைத்து எனக்கான வாய்ப்புக்களை பெற்று தந்துள்ளார். 

அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 

எனக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை நான் முடிந்தளவு பயன்படுத்தி என்னை வளர்த்துக்கொள்வேன் என வியாஸ்காந்த் தெரிவித்தார்.