Tamil Sports News

ஒரு பலத்த போட்டிக்கு தயாராகும் யுபுன் அபோகோன்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து யுபுன் விலகல்

file photo

யுபுன் அபோகோன் எதிர்வரும் ஜூன் 02 ஆம் திகதி இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் போட்டியிட உள்ளார்.

கடந்த தசாப்த கால வரலாற்றில் இலங்கை ஓட்டப் பந்தை வீரர் ஒருவர் பங்கெடுக்கும் மிகப்பெரிய போட்டி இதுவாகும்.

அதன்படி, குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் ஜூன் 2ஆம் திகதி நடைபெறவுள்ள புளோரன்ஸ் டயமண்ட் லீக்கில் (Florence Diamond League 2023) ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

இதில் 100 மீட்டர் ஓட்டத்தில் நடப்பு உலக சம்பியனான அமெரிக்காவின் பிரெட் கெர்லி, ஒலிம்பிக் சம்பியனான இத்தாலியின் லமொன்ட் மார்செல் ஜகப்ஸ் மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழா சம்பியனான கென்யாவின் பெர்டினண்ட் ஒமன்யாலா ஆகிய முன்னணி வீரர்களுடன் யுபுன் அபேகோன் போட்டியிடவுள்ளார்.

இது தவிர, முன்னாள் உலக சம்பியன் ஜமைக்காவின் யொஹான் பிளேக், முன்னாள் உள்ளக சம்பியன் ட்ரைவோன் ப்ரோமல் மற்றும் பொதுநலவாய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தென்னாப்பிரிக்காவின் அகானி சிம்பினே ஆகியோரும் புளோரன்ஸ் டயமண்ட் லீக்கில் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
Exit mobile version