ப்ரேஸ்வெல்கு அடித்த வாய்ப்பு | இலங்கை எதிர் நியூசிலாந்து ODI அணியில் மாற்றம்

3 days ago
Cricket
(67 views)
aivarree.com

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான நியூசிலாந்து குழாமில், சகலதுறை வீரர் ரச்சின் ரவீந்திரா, மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கு பதிலாக அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 2023 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியில் சேர நியூசிலாந்து ODI அணியில் இருந்து பிரேஸ்வெல் விடுவிக்கப்பட்டுள்ளார். 

காயமடைந்த இங்கிலாந்து வீரர் வில் ஜக்ஸுக்கு மாற்றாக ப்ரேஸ்வெல் ஆர்சீபியில் இணைகிறார். 

மிர்பூரில் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான இங்கிலாந்தின் ஒருநாள் போட்டியில் களத்தடுப்பு செய்யும் போது, ஜக்ஸ் தசையில் காயம் அடைந்தார்.

இதனால் அவர் அந்த சுற்றுப்பயணத்தின் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் ஐபிஎல்லில் இருந்தும் விலகினார். 

இப்போது, ​​மார்ச் 25அன்று ஈடன் பார்க்கில் இலங்கைக்கு எதிரான ODI தொடரின் முதல் போட்டியில் விளையாடும் முகமாக, புதன்கிழமை ஒக்லாந்தில் நியூசிலாந்தின் ODI அணியுடன் ரவீந்திரா இணைந்துகொள்வார். 

ரவீந்திரா நியூசிலாந்திற்காக ஆறு T20I மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆனால் ODIகளில் விளையாடியதில்லை.

அதேநேரம் நியூசிலாந்துக்காக 16, டி20 போட்டிகளில் விளையாடி 113 ஓட்டங்களை எடுத்து 21 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரேஸ்வெல், இதற்கு முன்பு ஐபிஎல்லில் விளையாடியதில்லை.

அத்துடன் கடந்த டிசம்பர் ஏலத்தில் அவர் எடுக்கப்படவில்லை. 

அவர் இப்போது தனது அடிப்படை விலையான 1 கோடி இந்திய ரூபாவுக்கு RCB இல் இணைகிறார்.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தனது ஐபிஎல் 2023 தொடரை ஏப்ரல் 2 ஆம் திகதி எம் சின்னசாமி மையானத்தில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆரம்பிக்கிறது.