Tamil Sports News

போர்ச்சுகலின் முக்கிய வீரர் அணியிலிருந்து நீக்கம்

யூரோகிண்ண தகுதிகாண் போட்டிக்கான போர்ச்சுகல் கால்பந்து அணியில் இருந்து அதன் பிரபல வீரர் பெப்பே நீக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக அவர் ஸ்போர்ட்ஸ் ப்ராகா உடனான போட்டியையும் கடந்த வாரம் தவறவிட்டிருந்தார்.

அவர் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள யூரோக்கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்பட்டிருந்த போதும், அவரது காயத்தின் ஆழம் கருதி அணியின் மருத்துவ குழாம் அவரை ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளது.

போர்ச்சுகல் அணி இம்மாதம் யூரோக்கிண்ண தகுதிகாண் போட்டியில் லீக்டென்ஸ்டெயின் அணியுடனும் அதன் பின்னர் லக்ஸ்ம்பர்க் அணியுடனும் விளையாடவுள்ளது.

இந்தத் தொடரில் க்றிஸ்டியானோ ரொனால்டாவும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version