பேலேயின் சொத்துக்கள் யாருக்கு? | சர்ச்சைகளும் இறுதி உயிலும்

2 weeks ago
Football
(35 views)
aivarree.com

கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமது 82வது வயதில் புற்றுநோயால் பீடிக்கப்பட்டுக் காலமானார்.

அவரது இறுதி உயில் குறித்த விபரங்கள் சிலவற்றை அவரது சட்டத்தரணி வெளியிட்டுள்ளார்.

இதன்படி அவரது மொத்த சொத்துக்களின் 30 சதவீதம், அவரது மூன்றாவது மனைவிக்குச் செல்லும் என்று உயில் எழுதப்பட்டுள்ளது.

அதில் பேலேவுக்கு சொந்தமான சாவோ போலோ கடற்கரையில் உள்ள ஆடம்பர மாளிகையும் அடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இதுவரையில் வெளியுலகுக்குச் சொல்லப்படாத பேலேயின் இன்னுமொரு மகள் தொடர்பாகவும் அவர் தமது உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

மீதமுள்ள 70 சதவீத சொத்துக்களில் ஒரு பகுதி அவருக்கும் செல்லவுள்ளது.

அவர் யார் என்று மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவு செய்யப்படும் என்று பேலேயின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.