பொலிஸாரை தாக்கியதாக ஆஸி. முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது குற்றச்சாட்டு

6 months ago
Cricket
(181 views)
aivarree.com

குயின்ஸ்லாந்தின் பிரபல விடுமுறை நகரமொன்றில் நடந்த மோதலின் போது, ​​பொலிஸாரை தாக்கியதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஸ்லேட்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியின் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாக அந் நாட்டு பொலிஸ்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

53 வயதான மைக்கேல் ஸ்லேட்டர் மீது பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தாக்கியமை போன்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் தற்சமயம் சுமத்தப்பட்டுள்ளன.

முன்னாள் துடுப்பாட்ட வீரரான மைக்கேல் ஸ்லேட்டர் 1993 முதல் 2001 வரை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாடினார்.

அவர் மொத்தம் 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பின்னர் அவர் ஒரு உயர்மட்ட கிரிக்கெட் வர்ணனையாளராக கடந்த 2021 வரை செயற்பட்டார் .