மே 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் நடைபெற்ற ஃபைரன்ஸ் ஸ்பிரிண்ட் நிகழ்வின் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் இலங்கையின் யுபுன் அபேகோன் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் பந்தைய தூரத்தை 20.60 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
இந்த ஓட்டப் பந்தையத்தில் இத்தாலியின் மார்கோ ரிச்சி இரண்டாவது இடத்தையும் (20.88 வினாடிகள்), இத்தாலியின் மற்றொரு வீரரான பிரான்செஸ்கோ லிபெரா (21.08 வினாடிகள்) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுபுன் அபேகோன், இந்த வெற்றியுடன் தரவரிசையில் முன்னேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அபேகோன் 100 மீற்றர் ஓட்டப்பந்தய வீரர்களில் உலக தரவரிசையில் தற்சமயம் 19 ஆவது இடத்தில் உள்ளார்.