Tamil Sports News

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கிங் கோலி

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவின் விராட் கோலி 2 சதங்களைப் பெற்றார்.

இலங்கைக்கு எதிரான தொடரில், சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 21 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றார்.

ஒரு எதிரணிக்கு எதிராக அதிக ஒருநாள் சதங்களை அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை கோலி பின் தள்ளினார்.

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் புதிய மைல்கல்லை தாண்டும் வாய்ப்பு அவருக்கு இருக்கிறது.

நியூசிலாந்து உலகின் முதலாம் நிலை ஒருநாள் அணியாக உள்ளது.

கோலி நியூசிலாந்துக்கு எதிராக 26 போட்டிகளில் 59.91 சராசரியில் மொத்தமாக 1378 ஓட்டங்களை குவித்துள்ளார்.

94.64 ஓட்ட வேக விகிதத்தையும் கொண்டுள்ளார்.

அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 8 அரைசதங்கள் அடித்துள்ளார்.

புதன்கிழமை ஆரம்பமாகும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில், நியூசிலாந்துக்கு எதிராக ரிக்கி பொண்டிங் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரின் சாதனையுடன் சமப்படுவதற்கு கோஹ்லிக்கு 1 சதம் மட்டுமே குறைவாக உள்ளது.

சேவாக் மற்றும் பொண்டிங் ஆகிய இருவரும் கிவீஸுக்கு எதிராக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தலா 6 சதங்கள் அடித்துள்ளனர்.

இந்த தொடரில் 2 சதங்களைப் பெற்றால், நியூசிலாந்துக்கு எதிரான அதிக ஒருநாள் சதங்களை அடித்த வீரராக பெயர் பெறுவார்.

விராட் கோலி இதுவரை 46 ODI சதங்களுடன் உள்ளார்.

ODI போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கரை வீழ்த்த இன்னும் 4 சதங்கள் மட்டுமே அவருக்கு தேவையான நிலையில் உள்ளார்.

இருப்பினும், அந்த சாதனையை முறியடிக்க, கோலி இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

Exit mobile version