கால்பந்து ஜாம்பவான் பீலேவின் பெயரை போர்த்துகீஸ் (Portuguese) மொழி அகராதியில் பொருள்பட பெயரடையாக சேர்த்துள்ளது Michaelis Portuguese அகராதி.
இது பிரேசில் நாட்டில் இருந்து வெளிவரும் அகராதியாகும்.
இதன் மூலம் உலகில் போர்த்துகீஸ் மொழியை பேசி வரும் 265 மில்லியன் மக்களுக்கு ‘பீலே’ என்பது அர்த்தமுள்ள சொல்லாக மாறியுள்ளது.
பீலே என்றால் ‘அபூர்வமான, ஒப்பற்ற, தனித்துவமான’ என்ற பொருளை குறிப்பிடும் வகையில் அந்த அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பீலே என்றால் ‘தன் பணியில் சிறந்து விளங்கும் ஒருவரை’ குறிப்பிட்டு சொல்லி வருவதாகவும் பீலே அறக்கட்டளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பீலே பிரேசில் அணிக்காக 1957 முதல் 1971 வரை விளையாடி 92 போட்டிகளில் 77 கோல்களை பதிவு செய்துள்ளார்.
அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலும் சுமார் 1,281 கோல்களை பதிவு செய்துள்ளார்.
‘ஃபிஃபாவின் நூற்றாண்டுக்கான சிறந்த வீரர்’ என்ற விருதை மற்றொரு கால்பந்து ஜாம்பவானும், தனது நண்பருமான மரடோனாவுடன் பீலே பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.