பாபர் அசாம் புதிய சாதனை

5 days ago
Cricket
(58 views)
aivarree.com

பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் பாபர் அசாம் 9000, T20 ஓட்டங்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார். 

அவர் மொத்தமாக 245 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார். 

தற்போது இடம்பெற்று வரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கில்(PSL) பெஷாவர் சால்மி அணிக்காக விளையாடும் அவர், ஸ்லாமாபாத் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியில் 64 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். 

இதன்மூலம் அவர் 9,000 ஓட்டங்களைக் கடந்துள்ளார். 

20/20 போட்டிகளில் மொத்தமாக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக க்றிஸ் கெயில் உள்ளார். 

அவர் 455 இன்னிங்ஸ்களில் 14,562 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 

அடுத்தபடியாக சொஹைப் மாலில், கீரன் பொலார்ட், ஆரன் ஃபின்ச், விராட் கோலி, டேவிட் வோர்னர், அலக்ஸ் ஹேல்ஸ், ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர். 

இந்த பட்டியலில் பாபர் அசாம் 16ஆம் இடத்திலுள்ளார்.