Tamil Sports News

பாபர் அசாம் அதிருப்தியில்

பாபர் அசாம் அதிருப்தியில்

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் இறுதிப் போட்டியில் வியைாடும் வாய்ப்பினை தவற விட்டமைக்காக பாபார் அசாம் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற பிளே-ஆப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் சல்மி அணி, லாகூர் கிலாண்டர்ஸ் அணியுடன் மோதியது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெஷாவர் சல்மி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லாகூர் கிலாண்டர்ஸ் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

இந்த வெற்றியின் மூலம் லாகூர் கிலாண்டர் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இப் போட்டியில் துடுப்பாட்டத்தில் 36 பந்துகளில் 42 ஓட்டங்களை பெற்றபோதும் பாபர் அசாம் தனது ஆட்டத் திறனை விமர்சித்துள்ளார்.

தனது திறன் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல போதுமானதாக அமையவில்லை என்று அவர் போட்டியின் பின்னர் கூறியுள்ளார்.

எனினும் பாபர் அசாம், இளம் வீரர்களான மொஹமட் ஹாரிஸ் மற்றும் சைம் அயூப் ஆகியோரை பாராட்டியதுடன், துடுப்பாட்ட வீரர்கள் ஆடுகள மற்றும் போட்டி சூழ்நிலைகளில் விளையாடி அவர்களின் ஆட்டத்தை கட்டமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Exit mobile version