பரபரப்பான போட்டியில் உலக சாதனைகளுடன் வென்ற தென்னாப்பிரிக்கா

1 year ago
Cricket
(466 views)
aivarree.com

மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20/20 கிரிக்கட் போட்டி இன்று சென்சூரியனில் நடந்தது. 

போட்டி ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. 

நாணய சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகளுக்கு வழங்கியது. 

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடி 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 258 என்ற மாபெரும் ஓட்ட இலக்கை அடைந்தது.

ஜோன்சன் சார்ள்ஸ் 46 பந்துகளில் 118 ஓட்டங்களைப் பெற்றார் (11X6, 10×4)

காயில் மேயர் 27 பந்துகளில் 51 ஓட்டங்களையும், ரொமேரியோ ஷெபர்ட் 18 பந்துகளில் 41 ஓட்டங்களையும் பெற்றனர். 

தென்னாப்பிரிக்காவின் மார்க்கோ ஜென்சென் 52 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும், வைன் பார்னல் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர். 

20 ஓவர்களில் 259 என்ற இலக்கை நோக்கி துடுப்பாடிய தென்னாப்பிரிக்கா, ஆரம்பம் முதலே மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சாளர்களை தொம்சம் செய்தது. 

குயிண்டன் டி கொக் 44 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்றார் (8×6, 9×4)

ரீசா ஹென்றிக் 28 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றார். 

தென்னாப்பிரிக்கா 18.5 ஓவர்களில் 4 விக்கடுகளை மட்டும் இழந்து போட்டியில் வெற்றியடைந்தது. 

போட்டியின் ஆட்ட நாயகனாக குயிண்டன் டி கொக் தெரிவானார். 

இந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. 

20/20 போட்டியின்றில் வெற்றிகரமாக துரத்திபிடிக்கப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையை இந்த போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது