நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை பரிதாபகரமாகத் தோல்வியை சந்தித்துள்ளது.
நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஒக்லேண்டில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை நியூஸிலாந்துக்கு வழங்கியது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்தும் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் 275 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கியது இலங்கை, நியூசிலாந்தின் பந்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனால் 19.5 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு சலக விக்கெட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களை மாத்திரேமே பெற்றது இலங்கை.
இதனால் நியூஸிலாந்து 198 ஓட்டங்களினால் அபாரமாக வெற்றி பெற்றது.
அணி சார்பில் அஞ்சலோ மெத்தீவ்ஸ் மாத்திரம் 18 ஓட்டங்களை பெற்றார், ஏனைய வீரர்கள் அனைவரும் சொல்லும் அளவுக்கு ஓட்டங்களைப் பெறவில்லை.
பந்து வீச்சில் நியூஸிலாந்து சார்பில் ஹென்றி சிப்லி 5 விக்கெட்டுகளையும், டேரில் மிட்செல் மற்றும் பிளேர் டிக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் நாயகனாக ஹென்றி சிப்லி தெரிவானார்.