இலங்கை கிரிக்கெட் அணி இன்று (27) அதிகாலை நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றது.

இது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவென்டி 20 போட்டிக்கான சுற்றுப்பயணம் ஆகும்.

இந்தப் போட்டிக்காக 17 வீரர்களும், 12 அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

இலங்கை அணி 02 டெஸ்ட் போட்டிகளிலும், 03 ஒரு நாள் போட்டிகளிலும், 03, 20 ஓவர் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது.
இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் கீழும், 3 ஒருநாள் போட்டிகள் உலகக் கோப்பை தொடருக்கான தகுதிப் போட்டிகளாகவும் அமையவுள்ளன.