நடால் – அல்கராஸ் கண்காட்சி போட்டி ரத்து

3 weeks ago
Tennis
(50 views)
aivarree.com

பிரபல டென்னிஸ் வீரர்களான கார்லோஸ் அல்கராஸுக்கும் ரஃபேல் நடாலுக்கும் இடையில் கண்காட்சி டென்னிஸ் போட்டியொன்று ஞாயிற்றுக்கிழமை லாஸ் வேகாஸில் நடைபெறவிருந்தது.

எனினும் அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கான டிக்கெட் வாங்கியோர் பணத்தைத் திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்கராஸின் வலது தொடை தசையில் காயம் ஏற்பட்டதால், போட்டி ரத்து செய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

காயம் காரணமாக மெக்சிகோவின் அகாபுல்கோவில் இந்த வாரம் நடந்த போட்டியில் இருந்து அவர் விலகினார்.

ஜனவரி மாதம் அவுஸ்திரேலியன் ஓபனில் இருந்து அவர் விலக காரணமான இடுப்பு சுளுக்கு பிரச்சனையால் நடால் ஏற்கனவே கண்காட்சி போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.

இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமியில் நடக்கவிருக்கும் மாஸ்டர்ஸ் 1000 போட்டிகளையும் தவறவிடுவதாக நடால் செவ்வாயன்று அறிவித்தார்.

36 வயதான நடால், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று ஆண்கள் பிரிவில் சாதனை படைத்துள்ளார்.

19 வயதான அல்கராஸ், கடந்த செப்டம்பரில் அமெரிக்க ஓபனில் தனது முதல் பெரிய கோப்பையை வென்றார்.