2023 ஐ.பி.எல். இறுதிப் போட்டியை தொடர்ந்து ஓய்வு குறித்து தோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது இது குறித்து பேசிய தோனி,
மிகவும் உணர்வுப்பூர்வமான இறுதி போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். என் கண்களில் கண்ணீர் மிதந்தது, என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம், ஆனால் எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது.
இங்கிருந்து இத்துடன் வெளியேறி விடுவது எளிதானது, ஆனால் கடினமான விடயம் என்னவென்றால், அடுத்த 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. அது என்னிடம் இருந்து எனது ரசிகர்களுக்கு கிடைக்கும் பரிசாக இருக்கும், அதற்காக நான் உடலை தயார் செய்ய வேண்டும்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் காணொளியில்,