20க்கு20 மகளிர் உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றது.
இம்மாதம் 10ஆம் திகதி இந்த தொடர் ஆரம்பிக்கிறது.
தொடரின் முதல் போட்டி இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் விளையாடும் இலங்கை அணிக்கான சீருடை கடந்த முதலாம் திகதி வெளிப்படுத்தப்பட்டது.
இலங்கை மகளிர் அணிக்கு சாமரி அத்தபத்து தலைமை தாங்குகிறார்.




