தென்னாபிரிக்க அணியின் தலைவராக எய்டன் மார்க்ரம்

1 year ago
Cricket
(410 views)
aivarree.com

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு தென்னாபிரிக்க அணியின் தலைவராக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் தலைவர் பவுமாக்கு ஏற்பட்ட உபாதை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இரண்டாவது போட்டியில் 144 ஓட்டங்கள் எடுத்ததைத் தொடர்ந்து பவுமா தொடை தசைப் பிடிப்பால் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளானார்.

இந்நிலையில் அவருக்கு மூன்றாவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்தீவுள் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.