தனுஷ்க குணதிலக்க தொடர்பாக SLC எடுத்துள்ள அதிரடி முடிவு

3 months ago
Local Sports
(1070 views)
aivarree.com

பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் கைதான இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவில் தடுப்பில் உள்ளார்.

அவருக்கு அனைத்து வகையான கிரிக்கட்டில் இருந்தும் உடனடியாக தடை விதிக்க சிறிலங்கா கிரிக்கட் தீர்மானித்துள்ளது.

இன்று (07) கூடிய சிறிலங்கா கிரிக்கட்டின் நிறைவேற்றுக் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அத்துடன் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீர்க்கமான விசாரணைகளை மேற்கொள்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.