தசுன் சானகவின் மீது புதிய குற்றச்சாட்டு

11 months ago
Local Sports
(1630 views)
aivarree.com

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனுஸ்க குணதிலக்க கைது செய்யப்பட்டு தடுப்பிலுள்ள நிலையில், அணியின் தலைவர் தசுன் சானகவின் மீது புதிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி, சுப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.

அங்கு கிரிக்கட் விளையாட சென்றிருந்த தசுன் சானக்க, காணி வர்த்தக நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விளையாடுவதற்காக சென்றவர் இவ்வாறு காணி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக்க தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் வைத்து அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.