டெல்லியில் ரிஷப்பிற்கு பதிலாக அபிஷேக் போரல்; மும்பையில் பும்ராவுக்கு பதிலாக சந்தீப்

6 months ago
Cricket
(159 views)
aivarree.com

2023 இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இன்று மாலை ஆரம்பமாகவுள்ள நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் ரிஷப் பந்திற்கு பதிலாக அபிஷேக் போரலை அணிக்குள் இணைத்துள்ளது.

அதேபோன்று மும்பை இந்தியன்ஸ் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில் அவரின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு சந்தீப் வாரியரை அணிக்குள் இணைத்துள்ளது.

விக்கெட் காப்பாளர் – துடுப்பாட்ட வீரராக இருக்கும் அபிஷேக் போரல் பெங்கால் (Bengal) கிரிக்கெட் அணிக்காக 16 முதல் தர மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்தியாவுக்காக விளையாடியுள்ள சந்தீப் வாரியர் இதுவரை 68 டி:20 போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவர் முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

போரல் 20 இலட்சம் (இந்திய) ரூபாவுக்காக டெல்லி அணிக்கும், சந்திப் வாரீயர் 50 இலட்சம் (இந்திய) ரூபாவுக்காக மும்பை அணிக்கும் வாங்கப்பட்டுள்ளனர்.