கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இங்கிலாந்தின் அதிரடி வீரர் ஜேசன் ரோயை 2.8 கோடி இந்தியா ரூபாவுக்கு ஒப்பந்த அடிப்படையில் வாங்கியுள்ளது.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரேயஸ் அய்யர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதேநேரத்தில் பங்களாதேஷ் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனும் இன்னும் கொல்கத்தா அணியுடன் இணையவில்லை.
முன்னதாக 2017 மற்றும் 2018 ஐ.பி.எல். தொடர்களில் இடம்பெற்ற ரோய் இறுதியாக 2021 பருவத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.
32 வயதான அவர் இங்கிலாந்துக்காக 64 டி:20 போட்டிகளில் விளையாடி 8 அரைசதங்கள், 137.61 சராசரியுடன் 1,522 ஓட்டங்களை எடுத்துள்ளார்.