சர்வதேச கபடி | முதல் போட்டியிலேயே இலங்கை தோல்வி 

2 years ago
Other Sports
(568 views)
aivarree.com

பங்கபந்து கிண்ண சர்வதேச கபடி போட்டி 2023ல் இலங்கை பங்கேற்ற முதல் ஆட்டம் நேற்று (14) தாய்லாந்துக்கு எதிராக நடைபெற்றது. 

இதில் இலங்கை அணி 36-32 என தோல்வியை தழுவியது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே தாய்லாந்து அணி வேகமாக விளையாடி முன்னேறியது.  

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் தாய்லாந்து அணி 36-32 என்ற புள்ளிக்கணக்கில் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் சிறந்த வீரராக தாய்லாந்தின் ஷாய் சிங் தேர்வு செய்யப்பட்டார்.  

இலங்கை பங்கேற்கும் அடுத்த ஆட்டம் இன்று (15) மலேசியாவுடன் இடம்பெறுகிறது.