கைலியன் எம்பாப்பே வரலாற்று சாதனை

2 weeks ago
Football
(36 views)
aivarree.com

பிரான்ஸ் நட்சத்திரமான கைலியன் எம்பாப்பே தனது 201 ஆவது கோலை பாரிஸ் செயின்ட் ஜேர்மைனுக்காக (PSG) அடித்துள்ளார்.

இதன் மூலம் 24 வயதான கைலியன் எம்பாப்பே பாரிஸ் செயின்ட்-ஜேர்மைனின் எல்லா காலங்களிலும் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்,

நான்டெஸ் அணிக்கு எதிராக 4-2 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி வெற்றி பெற்ற போட்டியிலேயே கைலியன் எம்பாப்பே 201 ஆவது கோலை அடித்தார்.

அவர் PSG க்கு அணிக்காக அடித்த 201 ஆவது கோல் இதுவாகும். அத்துடன் பிரான்சின் எடின்சன் கவனியின் சாதனையை கைலியன் எம்பாப்பே முறியடித்தார்.

அவர் PSG அணிக்காக 247 ஆட்டங்களிலிருந்து 201 கோல்கள் என்ற குறிப்பிடத்தக்கச் சாதனையைப் படைத்துள்ளார்.

1966 ஆம் ஆண்டு ஜெஃப் ஹர்ஸ்டுக்குப் பின்னர் கடந்த டிசம்பரில் கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையினையும் கைலியன் எம்பாப்பே பெற்றார்.

மேலும் பிரான்ஸ் வீரர் இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார் மற்றும் 2022 இல் கோல்டன் பூட்ஸ் விருதையும் பெற்றிருந்தார்.