காற்பந்து வர்ணனையாளரை நீக்கிய BBC

1 week ago
Football
(26 views)
aivarree.com

இங்கிலாந்தின் மிகச்சிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவரும் தற்போதைய ஒளிபரப்பாளருமான கேரி லினேக்கர் முக்கிய காற்பந்தாட்ட போட்டியின் BBC யின் நிகழ்ச்சி தொகுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான இங்கிலாந்து அரசின் புதிய கொள்கையினை விமர்சித்ததையடுத்தே இந்த நீக்கம் இடம்பெற்றுள்ளது.

1960 களிலிருந்தே ஒளிபரப்பப்பட்டு வரும் ‘Match of the Day’ போட்டி தொடர்பான தொகுப்பிலிருந்தே அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் தற்சமயம் கேரி லினேக்கருக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகின்றது.

மேலும் அவரது சக ஊழியர்களும் நிகழ்ச்சி தொகுப்பினை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.