2023 ஆம் ஆண்டு கோல்ஃப் மாஸ்டர்ஸ் போட்டி தொடரில் இருந்து டைகர் வூட்ஸ், காயம் காரணமாக விலகியுள்ளார்.
சனிக்கிழமையன்று மூன்றாவது சுற்றின் ஏழு துளைகளை முடித்த பிறகு, அவருக்கு காயம் ஏற்பட்டமை தெரியவந்தது.
மோசமான வானிலை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
வூட்ஸ் போட்டியை முடிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை விளையாட 29 துளைகள் மீதமுள்ளன.
இருப்பினும், வூட்ஸ் இறுதியில் போட்டியிலிருந்து விலகினார்.
கடுமையான வானிலை நிலைகளில் காயமடைந்த காலுடன் விளையாடுவது சிரமம் என அவர் தெரிவித்தார்.
காயம் காரணமாக தொடரிலிருந்து வூட்ஸ் விலகிய இரண்டாவது முறை இதுவாகும்.
PGA சாம்பியன்ஷிப் நியூயார்க்கின் ரோசெஸ்டரில் உள்ள ஓக் ஹில் கன்ட்ரி கிளப்பில் ஆறு வாரங்களில் நடைபெற உள்ளது.