ஓய்வு பெறுகிறார் சாம் ஸ்டோசர்

3 weeks ago
Tennis
(39 views)
aivarree.com

முன்னாள் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சாம்பியனான சாம் ஸ்டோசர், இந்த மாத ஆஸ்திரேலிய பகிரங்கத் தொடரைத் தொடர்ந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய பகிரங்க தொடருக்கு முன்னதாக, 38 வயதான அவர் இரட்டையர் பிரிவில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்று அறிவித்தார்.

ஸ்டோசர் 2011 இல் அமெரிக்க பகிரங்க இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸை தோற்கடித்தார்.

அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு பிரெஞ்சு பகிரங்கத் தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.  

மற்ற வீரர்களுடன் கூட்டு சேர்ந்து, பெண்கள் இரட்டையர் பிரிவில் நான்கு கிராண்ட் ஸ்லாம்களையும், கலப்பு இரட்டையரில் மூன்று கிராண்ட் ஸ்லாம்களையும் வென்றுள்ளார். 

இந்த நிலையில் நடக்கவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடருடன் தாம் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் தமது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.