ஒரே ஓவரில் 43 ஓட்டங்கள் | 7 சிக்சர்களை விளாசிய ருதுராஜ்

2 months ago
Local Sports
(665 views)
aivarree.com

மகாராஷ்டிரா மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே கிண்ணத்தின் காலிறுதி போட்டியில் மஹாராஸ்டிரா மற்றும் உத்தர் பிரதேஷ் அணிகள் மோதுகின்றன.

இதில் இரண்டாவது இரட்டை சதம் அடித்த அவர், 159 பந்துகளில் 16 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 220 ஓட்டங்களைப் பெற்றார்.

அத்துடன் ஷிவா சிங் வீசிய 49வது ஓவரில் ருதுராஜ் 43 ஓட்டங்களை எடுத்து (6,6,6,6+nb,6,6,6) உலக சாதனை படைத்தார்.

மகாராஷ்டிரா 50 ஓவர்களில் 330/5