ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக நடுவர் ஜதின் காஷ்யப் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) திங்களன்று குற்றம் சாட்டியுள்ளது.
2022 இல் நடந்த சர்வதேச போட்டிகள் தொடர்பான விசாரணையில் இந்த மீறல்கள் எழுந்ததாக ஐசிசி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இது ஐசிசியின் விதி 2.4.6 மற்றும் 2.4.7 ஆகியவற்றின் மீறலாகும்.
குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க ஜதின் காஷ்யப்பிற்கு மே 19 முதல் 14 நாட்கள் ஐசிசி அவகாசம் அளித்துள்ளது.