உலகக்கிண்ண வெற்றி கொண்டாட்டம் | ஆர்ஜன்டீனாவுக்கு அபராதம் விதிக்கவுள்ள ஃபிஃபா

3 weeks ago
Football
(34 views)
aivarree.com

கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக்கிண்ணத் தொடரின் இறுதி போட்டியில் ஃப்ரான்ஸை சமன்நீக்கி முறையில் வென்று ஆர்ஜன்டீனா சாம்பியனானது.

இந்த போட்டியின் முடிவின் பின்னர் லியோனால் மெஸி உள்ளிட்ட ஆர்ஜன்டீனாவின் வீரர்கள் செயற்பட்ட விதம் குறித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை, விதிமுறைகளை மீறி வன்முறைகளில் ஈடுபட்டதாகவும், ஒழுக்கமின்றி நடந்துக் கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போட்டி தொடர்பான நேரலை ஒளிபரப்பு இடம்பெறுகின்ற பிரதேசத்தை அவர்கள் பழுதடைய செய்துள்ளனர்.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு ஆர்ஜன்டீனாவின் கால்பந்து சம்மேளனத்துக்கு எதிராக ஒழுக்க விசாரணை நடவடிக்கைகளை சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆரம்பித்துள்ளது.

விசாரணை காலகட்டம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.