இவான் டோனியை இனரீதியாக தூற்றியவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை

7 days ago
Football
(21 views)
aivarree.com

ப்ரெண்ட்ஃபோர்ட் கால்பந்து அணியின் ஸ்ட்ரைக்கர் இவான் டோனியை இனரீதியாக தாக்கி பேசியமைக்காக 24 வயது இளைஞருக்கு இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு மைதானத்தில் இருந்தும் மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் திகதி சமூக ஊடகங்கள் மூலம் டோனிக்கு இனவெறி செய்தியை அனுப்பிய அன்டோனியோ நீலுக்கு நான்கு மாத சிறைத்தண்டனை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டு விதிக்கப்பட்டது.

டோனி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனக்கு நேர்ந்த துஷ்பிரயோகத்தைப் பகிர்ந்துள்ளார்.

இது போலீஸ் விசாரணைக்கு வழிகோளியது.

திங்கட்கிழமை தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு ஜனவரி மாதம் நியூகெஸ்டல் நீதிமன்றத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.