இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிப்பதில் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீடுகள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு இலங்கை வந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதித் தலைவர் இம்ரான் குவாஜாவும் இந்த குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழுவானது இலங்கையின் கிரிக்கெட் செயற்பாடுகளில் இடம்பெற்ற அரசியல் தலையீடுகள் குறித்து விசாரணை நடத்தும் என்று கூறப்படுகின்றது.
அதன்படி, குவாஜா தலைமையிலான ஐசிசி குழுவினர் நேற்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடனும் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
SLC உடனான கலந்துரையாடலின் போது, குவாஜா, அரசியல் தலையீடுகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் விளையாட்டை நிர்வகிப்பதில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கேட்டறிந்தார்.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அழைப்பின் பேரிலேயே ஐசிசி குழுவினர் இலங்கை வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.