25 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தது.
இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி விளையாடவுள்ளது.
இந்தப் போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
முதலாவது ஒரு நாள் போட்டி அடுத்த மாதம் 02ஆம் திகதி நடைபெறவுள்ளது.
உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்கு முன் இலங்கை பங்கேற்கும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இதுவாகும்.