இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளின் விற்பனை ஆரம்பமாகியுள்ளது.
இன்று (26) காலை 9 மணி முதல் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை வாங்க முடியும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
3 போட்டிகள் கொண்ட தொடரின் அனைத்து போட்டிகளும் அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளன.