இலங்கையின் அங்கத்துவத்தை இடைநிறுத்திய உலக ரக்பி நிர்வாகம்

2 weeks ago
Other Sports
(52 views)
aivarree.com

உலக ரக்பி நிர்வாகம், இலங்கை ரக்பியை உலக ரக்பி அங்கத்துவத்திலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.

இலங்கை ரக்பியில் அரசியல் தலையீடுகள் மற்றும் உலக ரக்பி விதிகள் மீறல் போன்ற காரணங்களினால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நிர்வாகச் சிக்கல்களைத் தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு முன்னுரிமை வழங்குவதாகவும் உலக ரக்பி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் இலங்கை விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆசியாவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.