ஆஸி. தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் தினேஷ் பிரியந்த

6 months ago
Local Sports
(284 views)
aivarree.com

பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத், குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற 2023 அவுஸ்திரேலிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிஏ ஆம்புலண்ட் பிரிவில் இவர் 63.18 மீற்றர் தூரம் வரை ஈட்டி எரிந்து முதலிடம் பெற்றார்.

இதேவேளை ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சமிதா துலான் வெள்ளிப் பதக்கத்தையும், அவுஸ்திரேலிய வீரார் மைக்கல் புரியன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.