ஆப்கான் – பங்களாதேஷ் சுற்றுப் பயண அட்டவணை அறிவிப்பு

1 year ago
Cricket
(313 views)
aivarree.com

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) எதிர்வரும் ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுடனான அனைத்து வடிவ கிரிக்கெட் தொடர்கள் குறித்து அறிவித்துள்ளது.

பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் ஜூன் 14 ஆம் திகதி டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியுடன் பங்களாதேஷுடனான தனது கிரிக்கெட் மோதலை ஆரம்பிக்கும்.

இந்த தொடருக்காக ஜூன் 10 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் அணி நாட்டை வந்தடையும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

பங்களாதேஷுக்கு வருவதற்கு முன், ஜூன் 2 ஆம் திகதி தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கெடுப்பதற்காக ஆப்கானிஸ்தான் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் BCB கூறியுள்ளது.

ஆப்கான் – பங்களாதேஷ் போட்டி தொடர்பான அட்டவணை

  • 14-18 ஜூன்: முதல் டெஸ்ட் – டாக்கா
  • 5 ஜூலை: முதல் ஒருநாள் – சட்டோகிராம்
  • 8 ஜூலை : இரண்டாவது ஒருநாள் – சட்டோகிராம்
  • 11 ஜூலை : மூன்றாவது ஒருநாள் – சட்டோகிராம்
  • 14 ஜூலை : முதல் டி:20 – சில்ஹெட்
  • 16 ஜூலை: இரண்டாவது டி:20 சில்ஹெட்