அஸ்வினின் சவாலை எதிர்கொள்ள அவுஸ்திரேலியா தனித்துவமான பயிற்சி

2 months ago
Cricket
(82 views)
aivarree.com

தற்போதைக்கு உலகின் மிகப்பெரிய டெஸ்ட் போட்டியாளர்களாக கருதப்படும் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இம்மாதம் 09 ஆம் திகதி தொடங்கும் 4-போட்டிகள் கொண்ட போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்துக்காக களமிறங்க உள்ளன.

இந்த தொடருக்கு முன்னதாக இந்தியாவில் சில பயிற்சி ஆட்டங்களை விளையாடும் திட்டத்தை அவுஸ்திரேலியா நிராகரித்தது.

இதனால், அவுஸ்திரேலியா தனித்துவமான முறையில் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது.

டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் அவரையே போன்றே பந்து வீசும் ஒருவரைக் கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

மகேஷ் பித்தியா என்ற அவர் ரவிச்சந்திரன் அஸ்வின் போலவே பந்துவீசக்கூடியவர்.

அவரை வலை பயிற்சியில் பந்துவீசச் செய்து அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் பயிற்சிபெற்று வருகின்றனர்.

அவுஸ்திரேலிய அணி அவரையும் பெங்களூருக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.