அவுஸ்திரேலிய ஓபன் | மேட்டியோவை வீழ்த்தினார் அண்டி மரே

3 weeks ago
Tennis
(33 views)
aivarree.com

அவுஸ்திரேலிய ஓபனின் இரண்டாம் நாளில் பிரிட்டனின் அண்டி மரே இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினிக்கு எதிரான போட்டியில் வென்றுள்ளார்.

அண்டி மரே 2017இன் பின்னர் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரொன்றில் முதல் -20 நிலைகளுள் உள்ள வீரர் ஒருவரை வீழ்த்தியுள்ளார்.

3 முறை பெருந்தொடர் வெற்றியாளரான மரே, இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றார்.

13-ம் நிலை வீரரான மேட்டியோ பெர்ரெட்டினியை மரே, 6-3, 6-3, 4-6, 6-7 (7), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வென்றார்.