அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

4 days ago
Cricket
(39 views)
aivarree.com

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, 35.4 ஓவர்களில் 188 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. 

அதிகபட்சமாக அவுஸ்திரேலியா சார்பில் மிச்சல் மார்ஸ் 81 ஓட்டங்களைப் பெற்றார். 

189 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 39.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியீட்டியது.

கே. எல். ராகுல் 75 ஓட்டங்களையும், ரவிந்திர ஜடேஜா 45 ஓட்டங்களையும் பெற்றனர். 

போட்டியின் ஆட்டநாயகனாக ரவீந்திர ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார்.