அமெரிக்க டி-20 லீக் தொடரில் விளையாடும் இலங்கை வீரர்கள்

6 months ago
Cricket
(168 views)
aivarree.com

அமெரிக்காவில் முதன்முறையாக நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் (MLC) முதல் பதிப்பில் விளையாடும் வாய்ப்பினை வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார்.

அத்துடன் தற்சமயம் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை வம்சாவளி வீரர்களான செனான் ஜெயசூரிய, லஹிரு மிலிந்த மற்றும் அஞ்சலோ பெரோரா ஆகியோரும் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 13 ஆம் திகதி ஆரம்பமாகும் டி-20 போட்டிகளானது ஜூலை 30 ஆம் திகதி வரை நடைபெறும்.

மொத்தம் 21 போட்டிகள் கொண்ட இத் தொடரில் ஆறு அணிகள் விளையாடவுள்ளன.

இந்தப் போட்டியானது அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் (ACE) இனால் ஏற்பாடு செய்யப்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.